Tuesday, March 22, 2011

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -மீண்டும் மீண்டும் சொதப்பல்!

இந்த ஆட்டத்தில் வென்றால், கால் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரும், தோற்றால் ஸ்ரீலங்காவை சந்திக்க நேரும் என்பது தவிர ஒரு முக்கியமான விஷயம் பற்றி தெரிந்து கொள்ள என்னைப் போலவே, பல ரசிகர்களும் ஆர்வமாக இருந்திருப்பார்கள். அதாவது, நமது மிடில் ஆர்டர் பேட்டிங் இங்கிலாந்து, தெ.ஆ விடம் சொதப்பியது போல இந்த ஆட்டத்திலும் சொதப்புமா என்பது தான் அது :)

டாஸில் வென்ற தோனி, இங்கிலாந்து, தெ.ஆ விடம் செய்தது போல பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். கனமான உருளையால் உருட்டப்பட்ட ஆடுகளம் என்பதால், bounce சற்று அதிகமாகவே இருக்கும் என்று பட்டது. இதை உணர்ந்த ராம்பால் short pitch வகை பந்துகளை வீச ஆரம்பித்தார். முதல் ஓவரிலேயே சச்சின் விக்கெட் இழந்தார். அம்பயர் அவுட் தராதபோதும், சச்சின் just walked!

தோனி இம்முறை பதானை அனுப்பி சொதப்பல் செய்ய விரும்பாமல், ஒழுங்காக கோலியை அனுப்பினார்! சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் பந்துவீச்சு சுமார் தான். ராம்பால் பந்து வீச்சில் கம்பீர் அவுட்! ஸ்கோர் 53/2 (9 ஓவர்களில்), ராம்பால் பந்துவீச்சு (5-0-25-2) மிக சிறப்பாக இருந்தது. யுவராஜ் களமிறங்கினார். 12வது, 13வது ஓவர்களில் வெ.இ கேப்டன் டேரன் சாமி, வயசான மாமி போல ஃபீல்டிங் செய்ததில், யுவராஜ் 2 முறை தப்பினார்!

யுவராஜும், கோலியும் ஜோடி சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ஸ்கோர் 173/2 (32 ஓவர்கள்). ரன்ரேட் 5.4. Even with 7 runs per over in the next 18 overs, a total of 300 was there for the asking! மீண்டும் ராம்பாலுக்கு விக்கெட், Kohli (59) bowled by a reverse swinging beauty! சுயநலக்கார தோனி தான் தடவித் தடவி ஆடி ஃபார்முக்கு வந்து விடும் நோக்கத்தில், களமிறங்கினார் (சொதப்பல் 1). அவரது தற்போதைய ஃபார்மை கணக்கில் கொண்டால், ரெய்னா தான் களமிறங்கியிருக்க வேண்டும். தோனி, ரெய்னாவை ஃபீல்டிங்குக்கு மட்டும் அணியில் சேர்த்தாரோ, என்ன எழவோ :) இந்த நிலையில் போலார்டும், பிஷுவும் நன்றாகவே பந்து வீசினர்.

42வது ஓவர் வரை கேவலமாக ஆடி கழுத்தறுத்த தோனி, பிஷு பந்து வீச்சில் அவுட். எடுத்தது 22 ரன்கள் (30 பந்துகள்) மட்டுமே! தெ.ஆ வுக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்ந்த கூத்து மீண்டும் நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் பவர் பிளேயும் இன்னும் எடுக்கப்படவில்லை! தோனி களமிறங்கி 4-5 ஓவர்களில், அதாவது 37வது அல்லது 38வது ஓவர்களில் பவர் பிளே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் (சொதப்பல் 2) இப்போது அதுவும் சாத்தியமில்லை. It was Dhoni who killed the momentum by coming 3 -down when he is in such pathetic form!

ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரெய்னா அடிக்கப் போய் அவுட்டானர். இறுதி வரை நின்று ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த யுவராஜும் (113) அடுத்த (45வது) ஓவரில் காலி! (சொதப்பல் 3). 46வது ஓவரில் கட்டாய பவர் பிளே :) மீண்டும் ராம்பால்! பவர் பிளே என்றால், ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பதான் ஆடியது பார்க்க பரிதாபமாக இருந்தது. Pathan's middle stump was uprooted by a reverse swinging yorker (சொதப்பல் 4). ஸ்கோர் 252-7 (47 ஓவர்கள்). ஹர்பஜன், சாகீர், முனாஃப் மொத்தமாக 2.2 ஓவர்கள் தாக்கு பிடித்தனர். இந்தியா 49.1 ஓவர்களில் 268க்கு ஆட்டமிழந்தது (சொதப்பல் 5) Rampal bowled wonderfully throughout & deserved his 5 wickets, 10 0 51 5

இங்கிலாந்து, தெ.ஆ வுக்கு எதிரான ஆட்டங்களில் நடந்தது போலவே, இவ்வாட்டத்திலும், 218/3 என்ற நிலையிலிருந்து, 7.3 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது! நமது பந்து வீச்சு சுமார் ரகம் என்பது தெரிந்தது தான். ஆனால், பேட்டிங் இப்படி தொடர்ந்து சொதப்புவது தான் கவலைக்கிடமான விஷயம்!

WI Batting: இந்தியாவின் பந்து வீச்சை வெ.இ நம்பிக்கையுடன் எதிர் கொண்டது. எதிர்பார்த்தது போல அஷ்வின் அபாரமாக பந்து வீசினார். தோனி தொடர்ச்சியாக அவரை 8 ஓவர்கள் ஏன் பந்து வீச வைத்தார் என்று தோனியைத் தவிர வேறு யாருக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை! (சொதப்பல் 6) ஹர்பஜன் பந்து வீச்சு மிகச் சாதாரணமாகவே இருந்தது. ரெய்னாவை ஃபீல்டிங்குக்கு அனியில் சேர்த்தது போல, தோனி முனாஃபை சுழற்பந்து வீசச் சொல்வாரோ என்று பயமாக இருந்தது :) பதான், யுவராஜ், ரெய்னா (முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்!) என்று எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்து விட்டு, போனால் போகிறது என்று முனாஃபுக்கு 25வது ஓவரில் வாய்ப்பு கொடுத்தார். This is captaincy at its worst denting the confidence of a new ball bowler! (சொதப்பல் 7)

ஸ்மித் ஆட்டம் அபாரமாக இருந்தது. 30 ஓவர்களில் ஸ்கோர் 154/2 (RR: 5.13, RRR: 5.75). ஸ்மித் 81 ரன்கள் (94 பந்துகள்). ராம்பாலுக்கு கை கூடிய reverse swing சாகீருக்கு வராதா என்ன! ஸ்மித் clean bowled! அடுத்த ஓவரில் ஹர்பஜனுக்கு ஒரு ஓசி விக்கெட். அதிரடி மன்னன் போலார்ட் அவுட்! ஹர்பஜனும், சாகீரும் வெ.இ பேட்டிங்கின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினர். அழுத்தம் கூடியதில், தேவையான ரன்ரேட் 6.8க்கு சென்றது (160/4) இந்த சூழலில், வெ.இ பேட்ஸ்மன் தற்கொலைப் படையாக மாறினர் :)

டேரன் சாமியை ரன் அவுட் செய்ய, முனாஃப் கையை நன்றாக உயர்த்தி, பின் செல்லமாக bails-ஐ தட்டி விட்டது, வடிவேலு காமடிக்கு நிகரான ஒன்று :) சாகீருக்கு 3 விக்கெட்டுகள், யுவராஜுக்கு 2 விக்கெட்டுகள். பிஷன் சிங் பேடி யுவராஜுக்கு சில tips கொடுத்தார் என்று செய்தி ஒன்று வாசித்திருக்கிறேன். யுவராஜ் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. யுவராஜ் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் பரிமளிப்பது, இந்தியாவுக்கு ஒரு ஆறுதலான விஷயம்.

இதற்கு மேல் வெ.இ பேட்டிங் குறித்து சொல்ல ஒன்றுமில்லை. 34 ரன்களில், 8 விக்கெட்டுகளை இழந்து, வெ.இ அணியினர் சொதப்புவதில் தாங்கள் இந்தியாவுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர் என்று நிரூபித்தனர். 43 ஓவர்களில் 188 ரன்களுக்கு வெ.இ ஆட்டமிழந்தது! இந்த வெற்றியின் மூலம், இந்தியா கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஸ்ரீலங்காவை எதிர்த்து ஆடுவதை விட இது பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது!

ஆரம்பத்தில், மீடியாவில் பயங்கரமாக ஏற்றி விடப்பட்ட இந்திய அணி, குரூப் ஆட்டங்களில் நல்ல அணிகளுடன் சொதப்பலாக விளைடியதில் ஒரு நன்மையும் இருக்கிறது. All the hype is gone now & no right thinking Indian cricket fan seriously feels that India has a great chance to win the World cup. இந்திய ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு இல்லாததால், கால் இறுதி அல்லது அரை இறுதி ஆட்டங்களில் (1996-இல் கொல்கத்தாவில் நடந்தது போல!) கலாட்டா/வன்முறை எதுவும் நிகழாது என்று நம்பலாம். இந்திய அணியை நான் கடுமையாக விமர்சித்தாலும், இந்தியா அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதற்கு என் வாழ்த்துகள்! "கடவுள்" தோற்கலாகாது என்பதால் என் பிரார்த்தனையும் தொடரும் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

4 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test

சக்தி கல்வி மையம் said...

நல்ல அலசல்..

said...

எ.அ.பாலா: ஹலோ...!! இந்த தடவையும் ஆஸ்திரேலியா தான் கோப்பை ஜெயிக்கும்...
இந்திய டீம்: தம்பி... போன் வொயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு...!!!
எ.அ.பாலா: ஹி ஹி ஹி...!!?! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... ஹோ ஹோ ஹோ..

(ஜெயிச்சோம்ல... ஆஸ்திரேலியாவ வீட்டுக்கு அனுப்புனோம்ல...!!! ஜிந்தக்தா ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக்தத்தா...!!!)

said...

Enga indha Bala after the quarter finals?
Match mudinju 3 naal appruram commentary poduvaaru.

Idhula avarukku oru edupu rasigar mandram vera.

Indha madhiri aasaaminga idly vadaikku thevaiya?

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails